உங்கள் பென்டிரைவ் கருவியை பரிசோதனை செய்து பாருங்கள்.

இன்று நாம் பல செயல்களுக்காக பென் டிரைவ் களை  உபயோகிக்கின்றோம்.  அப்படிப்பட்ட யுஎஸ்பியை நாம் என்றாவது ஒழுங்காக உபயோகித்து இருப்போமா 2 ஜிபி 300 ரூபாய்தானே என்று ஒரு கவனமின்மையுடன் கையாள்கிறோம். யுஎஸ்பி ஒடிக் கொண்டிருக்கும் போது அப்படி எடுப்பது இப்படி போன்ற செயல்கள். முன் ஒரு பதிவில் யுஎஸ்பியை முறையாக எடுப்பது குறித்த சில மென்பொருட்கள் பார்த்தோம். பதிவு

இன்று யுஎஸ்பி கருவிகள சோதனை செய்வது குறித்த மென்பொருட்களை கீழே காண்போம்.

செக் ப்ளாஸ்

இந்த மென்பொருள் உங்கள் யுஎஸ்பி எவ்வளவு வேகம் படிக்கும் / எழுதும் என்று சோதித்துக் கொடுக்கும். ஏதாவாது Writing Error வருகிறதா என்று சோதிக்க இந்த மென்பொருளை உபயோகிக்கலாம்.

மென்பொருள் தரவிறக்கம் சுட்டி

HD ஸ்பீடு

இந்த மென்பொருள் உங்கள் யுஎஸ்பி மட்டுமல்ல உங்களுடைய ஹார்ட்டிஸ்க், சிடி, டிவிடி ஆகியவற்றின் வேகத்தையும் சோதித்து கொடுக்கும்.

இதை நிறுவ தேவையில்லை

நேரடியாக இயக்கி பார்க்கலாம். வெறும் 80 கேபி அளவு.

சுட்டி

கிரிஸ்டல் டிஸ்க் மார்க்

இது ஒரு பென்ச் மார்க் டூல் இது உங்களுடைய யுஎஸ்பி வேகத்தை சோதித்து கொடுக்கும்.

சுட்டி

கீழ் வரும் இரண்டும் ட்ரையல் வெர்சன்

ப்ளாஸ் மெமரி டூல்கிட்

HD Tune

Read more: http://www.gouthaminfotech.com/2009/03/blog-post_07.html#ixzz0sjOeburP
Under Creative Commons License: Attribution

Advertisements
Posted in பகுக்கப்படாதது | Leave a comment

முதல் ஐந்து Portable மென்பொருட்கள்

முதல் ஐந்து Portable மென்பொருட்கள் நம்மிடம் உள்ள பெண்டிரைவில் மென்பொருட்களை நிறுவி அதனை எந்த ஒரு விண்டோஸ் இயங்குதளத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும் அதில் முதல் ஐந்து Portable மென்பொருட்கள்.

1.Firefox  இந்த மென்பொருளானது இண்டர்நெட்டில் உளவ பயன்படுகிறது. மேலும் இன்றைய நிலையில் அதிகமாக பயன்படுத்தப்படும் உளவியாக உள்ளது.

2.OpenOffice   ஒப்பன் ஆப்பிஸ் மென்பொருளானது Job work செய்ய பயன்படும். மேலும் இந்த மென்பொருளானது Microsoft நிறுவனத்தின் Ms-office க்கு சவாலாக உள்ளது.   3.GIMP  Image Editing ற்க்கு உதவும் மென்பொருளாகும்.

4.VLC Media Player  Media சம்ந்தபட்ட மென்பொருளாகும்.

5.Pidgin   இது ஒரு Messenger மென்பொருளாகும். இந்த மென்பொருளானது AOL, Yahoo, MSN, ICQ, GoogleChat ஆகியவற்றை சப்போர்ட் செய்யகூடியது ஆகும்.

Posted in பகுக்கப்படாதது | Leave a comment

பென்டிரைவில் அழிந்துபோன ஃபோல்டர்களை மீட்டெடுப்பது எப்படி?

நாம் வழக்கமாக நமது பென்ட்ரைவில் அத்தியாவசியமான கோப்புகளையும் அவற்றை உள்ளடக்கிய கோப்புறைகளையும் (Folders) சேமித்து வைப்பது வழக்கம். மால்வேர் மற்றும் ஸ்பைவேர்கள் உடனடியாக மற்றும் எளிதாக தாக்குவது பென் ட்ரைவை என்பதனால் சில சமயங்களில் நமது அதி முக்கியமான கோப்புறைகள் மறைக்கப் பட்டுவிடலாம். அதாவது உங்கள் பென் ட்ரைவில் கோப்புறைகள் இருக்கும் ஆனால் உங்களால் பார்க்கவோ, உபயோகிக்கவோ இயலாது. பென் ட்ரைவில் Usage space ஐ சோதித்தால் கோப்புறைகள் மறைக்கப்பட்டிருப்பதை உணரலாம்.

ஒரு சில மால்வேர்களின் வேலையே பென் ட்ரைவில் உள்ள கோப்புறைகளின் பண்பு கூற்றை (attribute) மாற்றி விடுவதுதான். இதனால் உங்கள் பென் ட்ரைவில் உள்ள கோப்புறைகளின் பண்பு கூறு Hidden ஆக மாறி விடுகிறது. இதை சரி செய்ய Explorer -ல் Attribute பகுதிக்குச் சென்றால் அங்கு Attribute வசதி செயல் இழக்கம் (Greyed out) செய்யப்பட்டிருக்கும். ஒரு சில வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் மூலமாக முயற்சி செய்தாலும் சில சமயங்களில் மீட்பது சிரமம்தான்.
இந்த நிலையில் என்ன செய்யலாம்?
முதலில்  உங்கள்  பென் ட்ரைவின் ட்ரைவ் லெட்டரை அறிந்து கொள்ளுங்கள். உதாரணமாக I: என வைத்துக் கொள்வோம். Command Prompt ஐ திறந்து கொண்டு i: என டைப் செய்து என்டர் கொடுங்கள்.
இனி வரும் I:> என்ற ப்ராம்ப்ட்டில் attrib -r -s -h *.* /s  /d என டைப் செய்து என்டர் கொடுங்கள்.
உங்கள் பென் ட்ரைவில் உள்ள கோப்புகள் மற்றும் கோப்புறைகளின் அளவைப் பொறுத்து இந்த கட்டளை செயல்படும் நேரம் மாறுபடும். மறுபடியும் I:> ப்ராம்ப்ட் வந்த பிறகு Exit என டைப் செய்து என்டர் கொடுத்து விண்டோஸ் க்கு வந்து விடலாம். இப்பொழுது My Computer சென்று பென் ட்ரைவை திறந்து பாருங்கள். உங்கள் கோப்புறைகள் மீட்டெடுக்கப் பட்டிருப்பதை காணலாம்.
இந்த பணியை செய்ய Files & Folders Reset Tool என்ற கருவி உள்ளது. ஆனால் ஒரு சில பென் ட்ரைவ்களில் இது சரியாக வேலை செய்யவில்லை. எதற்கும் முயற்சித்துப் பாருங்கள்.
Posted in பகுக்கப்படாதது | Leave a comment

பென்டிரைவ்க்கு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க.

தற்போது பென் டிரைவ்களின் பயன்பாடு முக்கியமானது. தகவல்களை எளிமையான வழியில் ஓரிடத்திலிருந்து வேறிடம் கொண்டு செல்லவும் தகவல்களை சேமிக்கும் கருவியாகவும் செயல்படுகிறது. நமது பென் டிரைவ்களை பாதுகாப்பாக வைக்கவும் பிறர் பார்க்கவண்ணம் செய்யவும் அதை பாஸ்வோர்ட் கொடுத்து வைக்கலாம்.இதனால் தகவல் திருட்டு தடுக்கப்படுகிறது.

Usb Flash Sequrity

Usb Flash Sequrity என்ற மென்பொருள் மூலம் பாஸ்வோர்ட் கொடுத்து விடலாம். இந்த சிறிய மென்பொருளை உங்கள் கணினியில் எளிதாக நிறுவலாம். பிறகு உங்கள் டிரைவை தேர்வு செய்து பாஸ்வோர்ட் கொடுங்கள். பின்னர் “Autorun.inf”  மற்றும்  “UsbEnter.exe” என்ற இரண்டு கோப்புகளை மட்டுமே காண முடியும். Usbenter.exe கோப்பை தேர்வு செய்து உங்கள் பாஸ்வோர்ட் கொடுத்தால் மட்டுமே டிரைவில் உள்ள கோப்புகளை காண முடியும்.

தரவிறக்கசுட்டி:Usb Flash Sequrity

Posted in பகுக்கப்படாதது | Leave a comment

கணிணியில் autorun.inf வைரஸ்கள் வராமல் தடுக்க Panda Usb Vaccine

கணினிக்கு வருகிற வைரஸ்கள் எல்லாம் பென் டிரைவ் மூலம் அதனுள் உள்ள autorun.inf என்ற கோப்பை மாற்றி அதன் வழியாக பரவி விடுகின்றன. நீங்கள் ஏதேனும் ஆண்டிவைரஸ் போடவில்லை என்றால் அவ்வளவு தான். உட்கார்ந்து விடவேண்டியது தான். எனவே இந்த கோப்பை நீங்கள் முடக்குவதன் மூலம் கணினியை பாதுகாக்கலாம்.

பாண்டா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள மற்ற டிவைஸ்களின் தானியங்கும் செயலையும் முடக்கும். உதாரணமாக சிடி அல்லது டிவிடி டிவைஸ்கள். மேலும் autorun கோப்புகள் எங்கிருந்து செயல்பட்டாலும் முடக்கும்.கணினிக்கும் பாதுகாப்பை பலப்படுத்தும்.

அடுத்து பென் டிரைவ்கள், மெமரி கார்ட்கள் மற்ற Usb கருவிகள் எதை கணினியில் நுழைத்தாலும் அதை முடக்கிவிடும். நீங்கள் கணினியில் இதை முடக்க தேடிக்கொண்டிராமல் இந்த மென்பொருள் மூலம் கணினியை பாதுகாப்பாக வைத்திருங்கள். நன்றி.

Download Panda USB Vaccine

Posted in பகுக்கப்படாதது | Leave a comment

உங்கள் பென் டிரைவ்க்கு Start Menu

நண்பர்களே,
தற்போது பென் டிரைவ் ஏறக்குறைய கணிணி பயன்படுத்துபவர்கள் அனைவரும் பயன்படுத்துகிறார்கள்.CD,DVD யை விட பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதால் பெரும்பாலும் கோப்புகளை எடுத்துச்செல்ல பயன்படுத்தபடுகிறது.64 GB அளவு பென் டிரைவ் கூட வந்துவிட்டது.

பென் டிரைவ்வை கையாள உதவும் ஒரு Softபொருள் பற்றி இங்கு பார்ப்போம். Windowsல் start menu அனைவரும் அறிந்துருப்போம். அது போல் நமது பென் டிரைவ்க்கு Start Menu போல் மெனு தருகிறது இந்த Softபொருள்.

இந்த மென்பொருளை நிறுவும் பொது உங்கள் பென் டிரைவ்ல் நிறுவி கொள்க.கீழே உள்ள புகைப்படத்தை பெரிதாக்கி பார்க்க படத்தில் உள்ளது போல் பென் டிரைவ்ல் நிறுவி கொள்க.

பின் பென் டிரைவ்ல் நிறுவி உள்ள psmenu.exe என்ற கோப்பை இயக்குக.முதன்முதலில் இயக்கும் போது கீழ்க்கண்ட செய்தி வரும் அதில் create AUTORUN file என்பதை தேர்வு செய்து கொள்க.இதன் மூலம் உங்கள் பென் டிரைவ்வை கணிணியில் இணைத்தவுடன் இயங்க தொடங்கி விடும்.

இந்த மென்பொருள் இயங்க தொடங்கிய பின் Tray யில் ஸ்டார்ட் மெனு போல் வந்து விடும் அதில் Settings தேர்வு செய்து கீழே உள்ளது போல் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் கோப்புகள்,Applications ஆகியவற்றை இணைத்து கொள்ளலாம்.

பென் டிரைவ்க்காண Start Menu கீழே உள்ளது போல் தோன்றும் .இதன் மூலம் உங்கள் பென் டிரைவ்வை எளிதாக பயன்படுத்தலாம்.

மெனுவில் உள்ள Close all running applications கிளிக் செய்வதன் மூலம் பென் டிரைவ்வை எளிதாக நீக்கலாம்.

இந்த Softபொருளை டவுன்லோட் செய்ய சுட்டி

Posted in பகுக்கப்படாதது | Leave a comment

பென் டிரைவின் ஐகான் படத்தை மாற்றுவது எப்படி?

நீங்கள் பென் ட்ரைவினை ஒவ்வொரு முறை சொருகும் போதும் கணினியில்
அதற்கான ஐகான் ஒன்று எப்போதும் போல தோன்றும். இதை பார்த்து பார்த்து
சலிப்படைந்து விட்டீர்களா? இந்த படத்தை மாற்றி உங்களுக்கு பிடித்த படத்தை எப்படி வைப்பது என்று பார்ப்போம்.

1. முதலில் உங்களுக்கு பிடித்த படத்தை தேர்வு செய்துவிட்டு அதை ஐகானாக மாற்றுங்கள்.இதற்கு IconSushi என்ற இலவச மென்பொருள் உதவும். இது பல வடிவங்களிலிருந்து ஐகானாக மாற்றுகிறது. (import: ICO/BMP/PNG/PSD/EXE/DLL/ICL, Export: ICO/BMP/PNG/ICL.) .இதைப்பெற
IconSushi

2. Notepad ஐத்திறந்து கீழ்வரும் மூன்று வரிகளை அடித்துக்கொள்ளுங்கள்.

[autorun]
label=ponmalar
Icon=usb_icon.ico

இதில் இரண்டாவது வரியில் label என்பதில் உங்கள் பெயரோ அல்லது உங்களுக்கு பிடித்த பெயரைக்கொடுங்கள்.

மூன்றாவது வரியில் உங்கள் ஐகானுக்குரிய பெயரை கொடுக்கவேண்டும். உங்கள் ஐகான் படம் கண்டிப்பாக பென் டிரைவில் இருக்க வேண்டும்.

3.இந்த வரிகளை அடித்து முடித்து விட்டு “autorun.inf” என்ற பெயரில் பென் டிரைவில் சேமிக்க வேண்டும். முக்கியம் கண்டிப்பாக சேமிக்கும் போது
முன்னும் பின்னும் மேற்கோள் குறிகள் இருக்க வேண்டும்.

4. இறுதியாக ஐகான் படமும் autorun.inf கோப்பும் பென் டிரைவில் இருக்கிறதா
என்று உறுதி செய்து கொள்ளவும். இந்த இரண்டு பைல்களையும் யாருக்கும் தெரியாதவாறு மறைத்து ( Hidden ) வைத்து கொள்ளலாம்.


அதற்கு பிறகு நீங்கள் ஒவ்வொரு தடவையும் பென் டிரைவை செருகும் போதும் உங்களின் விருப்ப ஐகான் தான் தோன்றும். நன்றி!

Posted in பகுக்கப்படாதது | Leave a comment