பென்ட்ரைவ் போர்ட்டபுள் அப்ளிகேஷன் உருவாக்குவது எப்படி?

நமக்கு மிகவும் அடிக்கடி தேவை படுகின்ற மற்றும் உபயோகபடுத்துகின்ற சாஃப்ட்வேர்களை பென் ட்ரைவ் வில் உபயோகபடுத்தும் வண்ணம் போர்ட்டபிள் ஆக மாற்றி வைத்துக்கொண்டோம் ஆனால் பொது
கணினியில் அவற்றை நிருவவேண்டிய அவசியம் இருக்காது அவற்றை
பென்ட்ரைவிலிருந்தே நமது வேலைகளை சுலபமாக செய்து முடிக்கமுடியும்.
முதலில் நீங்கள் எந்த சாஃப்ட்வேர் ஐ போர்ட்டபிள் ஆக மாற்ற வேண்டுமோ அதை முதலில் உங்கள் கணினியில் c டிரைவ்வில் நிறுவிக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக
Epic Browser ஐ (எஃபிக் பிரௌசரை) போர்டபுள் ஆக மாற்றுவதை பார்ப்போம்.
இங்கு சென்று Epic Browser எஃபிக் பிரௌசரை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் சி டிரைவ்வில் நிறுவிக்கொள்ளவும் .
பின் c டிரைவில் Program Files இல் Epic என்ற போல்டரை தேர்ந்த்தெடுத்து அப்படியே copy செய்து டெஸ்க்டாபில் paste செய்து அதன்பின் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Add to Epic.rar என்பதை தேர்வு செய்யவும் இப்போது Epic என்ற folder compress ஆகி இருக்கும் இந்த file ஐ winrar application கொண்டு open செய்தால் கீழ்க்கண்டவாறு தோற்றமளிக்கும் அதில் சிகப்பு கட்டம் கட்டி காட்டபாட்ட SFX என்பதை Clik செய்யவும்

Clik செய்தால் தோன்றும் மெனுவில் சிகப்பு கட்டம் கட்டி காட்டபாட்ட Advanced SFX Options என்பதை select செய்யவும்

பின் தோன்றும் மெனுவில் சிகப்பு கட்டம் கட்டி காட்டபாட்ட Run after extraction இடத்தில் epic.exe என்று எழுதவும்

அதன்பின் அதே menu வில் மூன்றாவதாக உள்ள Modes tab ஐ click செய்யவும் அதில் சிகப்பு கட்டம் கட்டி காட்டபாட்ட unpack to temporary folder என்பதை select செய்து அதற்கு கீழ் சிகப்பு கட்டம் கட்டி காட்டபாட்ட Hide All என்பதை select செய்து அதற்கு கீழ் சிகப்பு கட்டம் கட்டி காட்டபாட்ட Skip Existing files என்பதை select செய்து பின் வெளியேறவும்

இப்போது Epic என்ற போல்டரை தேர்ந்த்தெடுத்து அப்படியே copy செய்து டெஸ்க்டாபில் paste செய்த இடத்தில்

படத்தில் உள்ள வாறு file தோன்றும் அந்த file ஐ winrar கொண்டு extract செய்து வரும் folder ஐ pendrive இல் ஏற்றி எங்குவேண்டுமானாலும் உபயோகபடுத்தலாம்.இவ்வாறு செய்து கிடைப்பது போர்ட்டபுள் அப்ளிகேஷன் ஆகும் .

குறிப்பு :
மேற்கண்ட படத்தில் சிகப்பு கட்டம் கட்டி காட்டபாட்ட Skip Existing files என்பது windows 7 இல் மேற்கண்ட படத்தில் உள்ள Modes பட்டனில் இல்லாமல் update என்ற tab click செய்தால் over write mode என்பதில் மூன்றாவதாக காணப்படும் .

Advertisements
Posted in பகுக்கப்படாதது | Leave a comment

யு‌எஸ்‌பி பென்ட்ரைவில் விண்டோஸ் 7 ஐ நிறுவுவது எப்படி ?


இவ்வாறு நிறுவுவதற்க்கு 4 ஜி‌பி பென்ட்ரைவ் மற்றும் விண்டோஸ் 7 டி‌வி‌டி தேவை .

முதலில்

1. யு‌எஸ்‌பி போர்ட்டில் யு‌எஸ்‌பி பென்ட்ரைவ் யினை செருகவும்

2. USB Flash Drive யு‌எஸ்‌பி பென்ட்ரைவ் யினை NTFS ஆக Format செய்யவும்

3. Windows7/Vista DVD யினை அதற்குரிய Drive ல் இடவும்

4. பின் dvd Drive மற்றும் பென்ட்ரைவ் களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எழுத்தை (drive letter) பார்க்கவும். My Computer ல் இதனை காணலாம்
(இங்கு நான் DVD Drive க்கு ‘D’ யும் Flash Drive க்கு ‘H’ எனவும் கொடுத்துள்ளேன்

5.Command Prompt ஐ திறக்கவும்
*Type cmd in Start menu search box and hit Ctrl+ Shift+ Enter.
அல்லது
*Start menu > All programs > Accessories, right click on
Command Prompt and select Run as administrator.

6. Command Prompt ல் பின்வருவதை டைப் செய்து என்டர் தட்டவும்

D: CD BOOT என டைப் செய்து என்டர் தட்டவும்
இங்கு D பதிலாக உங்கள் DVD drive letter யினை தரவும்

அடுத்து CD BOOT என டைப் செய்து என்டர் தட்டவும்

7. BOOTSECT.EXE /NT60 H: என டைப் செய்து என்டர் தட்டவும்.
இங்கு H பதிலாக உங்கள் Pendrive letter யினை தரவும்

8. Windows 7/Vista DVD உள்ள கோப்புகள் அனைத்தையும் USB flash drive க்கு கொப்பி செய்யவும்

9. இனி உங்கள் pendrive ஆனது windows 7 bootable Flash Drive ஆக மாறிவிட்டது..

இனி நீங்கள் எந்தக் கணணிக்கும் உங்கள் windows 7 bootable Flash Driveல் இருந்து Windows 7னை நிறுவிக் கொள்ளலாம்..

Bios ல் boot priority யினை USB from the HDD or CD ROM drive க்கு மாற்றி பின் வழக்கம் போலவே நிறுவிக் கொள்ளலாம்.

Posted in பகுக்கப்படாதது | Leave a comment

உங்கள் பென் ட்ரைவர்களை வைரஸ்களிடமிருந்து பாதுகாக்க…


ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிளாப்பி ட்ரைவர்கள் வைரஸ்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணிகளை செய்து கொண்டு இருந்தன.

இப்போது காலம் மாறிவிட்டது.

பிளாப்பிகளுக்கு மாற்றாக பிளாஷ் டிரைவர்கள்…

ஆனால் பிளாப்பி பணிகளை உங்கள் பென் டிரைவ்கள் செய்கிறது.

உங்கள் கோப்புகளுடன் வைரஸ்கள்….

தடுக்கமுடியுமா?

முடியும்.

சின்ன கோப்பை பதிவிறக்கம் செய்தால் போதும்.

சுறுக்கப்பட்ட வடிவத்தில் கிடைக்கும்.

இக்கோப்பின் அளவு 500கேபி அளவை மட்டுமே யுஎஸ்பி டிரைவில் பிடிக்கப்போகிறது.

இங்கே கிளிக் செய்து கோப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

சுறுக்கப்பட்ட கோப்பான ரார் (Rar) வடிவத்தை விரித்துக் கொள்ளலாம் அல்லது சிப் 7 பதிப்பில் திறந்து கொள்ளலாம்.

திறக்கப்பட்ட கோப்புக்களை உங்கள் பென் டிரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்கில் ஒட்டுங்கள்.

இதற்கு பென்பொருள் மன்னிக்கவும் மென்பொருள் நிறுவத்தேவை இல்லை.

விரிக்கப்பட்ட கோப்பில் uspwriteProtect.exe பைலை கிளிக் செய்ய….

மொழியை தேர்வு செய்து…

Usp write protect ON

Usp Write Protect OFF

இரு தேர்வில் ஆன் செய்து கொள்ளுங்கள்.

முடிந்த்து.

பாதுபாப்பு பணி அக்கோப்பு பார்த்துக் கொள்ளும்.

எந்த பேய், பூதம், பிசாசுக்களை அண்ட விடாது.

இந்த தாயத்து ஆப் ஆகிவிட்டால் வைரஸ் ஆட்டுவித்துவிடும்.

Posted in பகுக்கப்படாதது | 1 Comment

கிங்ஸ்டனின் 64 GB பென்டிரைவ்

பென் டிரைவ் தயாரிப்பில் பிரபலமான கிங்ஸ்டன் நிறுவனம் அண்மையில் கிங்ஸ்டன் டேட்டா ட்ராவலர் 150 என்ற பிளாஷ் டிரைவினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கொள்ளளவு திறன் 64 ஜிபி.

மற்ற டிரைவ்களைக் காட்டிலும் சற்று கூடுதல் நீளத்தில், 77.5 மிமீ, இது அமைக்கப்பட்டுள்ளது. அகலம் 22 மிமீ மற்றும் தடிமன் 12.05 மிமீ. இதனுடைய எடை மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் வெளிப்புற ஷெல் சிகப்பாக பாலிஷ் செய்யப்பட்டது போல் உள்ளது. இது இயக்கப்படுகையில் நீல நிறத்தில் உள்ளாக லைட் எரிகிறது.

பைல்களை நொடிக்கு 28.3 எம்பி வேகத்தில் படிக்கிறது. எழுதுகையில் நொடிக்கு 7.8 எம்பி வேகத்தில் செயல்படுகிறது. இந்த வேகம் சராசரியாக நாம் பிற பிளாஷ் டிரைவ்களில் பார்க்கும் வேகம் தான்.

ஐந்தாண்டு வாரண்டியுடன் கிடைக்கும் இந்த டிரைவ் குறியீட்டு விலை ரூ. 6,700.

அதே போல்
45  நாட்களுக்குத் தொடர்ச்சியாக,நான்ஸ்டாப் பாகப் பாடக்கூடிய வகையில் 16 ஆயிரம் பாடல்கள் அல்லது “டிவிடி” குவாலிட்டியில் 70 சினிமாப் படங்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை முழுமையாகப் பதிவு செய்யும் வகையிலான 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட புதிய பென் டிரைவினை,சான்டிஸ்க் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது.
Posted in பகுக்கப்படாதது | Leave a comment

தேர்ட் பார்ட்டி யு.எஸ்.பி.சேப்லி ரிமூவ் புரோகிராம்கள் .

விண்டோஸ் சிஸ்டத்திலேயே யு.எஸ்.பி. போர்ட்களில் இணைக்கப்படும் சாதனங்களை எடுத்திட சேப்லி ரிமூவ் வசதி தரப்பட்டுள்ளது. இருப்பினும் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இதற்கென வடிவமைக்கப்பட்டு நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன.USB Safely Remove என்ற அந்த புரோகிராமின் புதிய பதிப்பு 4.3.2 தற்போது வெளியாகியுள்ளது.

இதில் என்ன புதிதாய் இருக்கிறது என்று பார்க்கலாமா!

1. இந்த புரோகிராமில் இருந்த ஆட்டோ ரன் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. எந்த சாதனத்தை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தாலும் அதில் உள்ள தேர்ட் பார்ட்டி புரோகிராம் ஒன்றினை இயக்கும் வகையில் செட் செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி எக்ஸ்புளோரர் புரோகிராமினை இயக்கலாம். அல்லது பைல் மேனேஜரை இயக்கி என்ன என்ன பைல்கள் இருக்கின்றன எனப்பார்க்கலாம்.

2. யு.எஸ்.பி.யில் இணைக்கப்பட்டுள்ள சாதனத்தை நீக்கும் முன் அதில் உள்ள பைல்களை ஆட்டோ பேக் அப் எடுக்கும் வகையில் செட் செய்திடலாம்.

3. எக்ஸ்டெர்னல் டிரைவ் என்றால் அதனை இணைக்கும்போதே ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை செய்திடும் படி அமைக்கலாம். இதே போல பல செயல்பாடுகளை செட் செய்திடலாம்.

யு.எஸ்.பி.யில் இணைத்த சாதனம் எந்நிலையில் உள்ளது என்று அறிய பல்வேறு ஐகான்கள் காட்டப்படுகின்றன. இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தும் இயக்கத்தில் உள்ளனவா என்று காட்டப்படும். போர்ட்டில் சாதனங்களே இல்லை என்றாலும் ஐகான் மூலம் தெரிந்து கொள்ளலாம். இணைக்கப்பட்ட ஒரு சாதனத்தின் இயக்கம் நிறுத்தப்பட்ட பின்னர் அது நீக்கப்படவில்லை என்றால் காட்டப்படும். இதன் பயன்பாடுகள் குறித்து மேலும் அறிய மேலே தரப்பட்டுள்ள இணைய தளத்தினையே காணவும்.

தரவிறக்கம் செய்ய : [ இங்கே கிளிக் செய்யவும் ]

யு.எஸ்.பி ட்ரைவ் Safely Remove Hardware செய்தியை நீக்க….

யு.எஸ்.பி. போர்ட்டில், பல சாதனங்களை இணைத்துப் பயன்படுத்துகிறோம். பிளாஷ் ட்ரைவ், டேட்டா கார்ட், கேமரா போன்ற அனைத்தும் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைக்கும் வகையில் இன்று வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கின்றன. இவற்றை போர்ட்டிலிருந்து, மீள விலக்கும்போது அதற்கான Safely Remove Hardware ஐகானைக் கிளிக் செய்து மெசேஜ் கிடைத்த பின்னரே எடுக்க வேண்டியுள்ளது. பொறுமை இன்றி, எடுக்கும்போது, சிஸ்டம் அந்த சாதனத்தின் ட்ரைவில் ஏதேனும் எழுதிக் கொண்டிருந்தால், பிரச்னை ஏற்படுகிறது.

இந்த பிரச்னையைத் தீர்க்க, விரைவில் ட்ரைவ் மற்றும் பிற சாதனங்களை விலக்க ஒரு தீர்வு உள்ளது. இதற்கான செட்டிங்ஸில் சிறிய மாற்றம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.

1.விண்டோஸ் எக்ஸ்புளோரரில் மெமரி கார்டிற்கான ட்ரைவில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ் (Properties) ) தேர்ந்தெடுக்கவும்.

2.இப்போது காட்டப்படும் விண்டோவில் ஹார்ட்வேர் (Hardware) என்னும் டேப்பில் கிளிக் செய்து இங்கு மெமரி கார்ட் ரீடரைத் தேர்ந்தெடுக்கவும். இங்கும் உள்ள மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் (Properties)தேர்ந்தெடுக்கவும்.

3.கிடைக்கும் விண்டோவில் பாலிசீஸ் (Policies)டேப்பில் கிளிக் செய்திடவும். பாலிசீஸ் காட்டப்படும் முன் சேஞ்ச் செட்டிங்ஸ் Change Settings) பட்டனைக் கிளிக் செய்திட வேண்டி இருக்கலாம்.

4.இனி உள்ள விண்டோவில் Download updates but let me choose whether to install themஎன்பதைத் தேர்ந்தெடுத்துப் பின் கிளிக் செய்து வெளியேறவும்.

இனி Safely Remove Hardware உங்களுக்குத் தேவை இருக்காது.

Posted in பகுக்கப்படாதது | Leave a comment

பூட்டாகாத கணினியை யுஎஸ்பி வாயிலாக திறப்பது எப்படி?


எப்பொழுதுமே நமது கணினியானது Hard Disk ( வன் வட்டு ) இன் உதவியில் boot ஆகி இயங்க ஆரம்பிக்கும்.
Boot
என்பது கணினியை ஆரம்பிக்கும் செயல்.

ஏதாவது பிரச்சினைகளால் நமது கணினி Boot ஆகாமல் தவிக்க நேரிடலாம். அப்போது Floppy,CD,DVD வாயிலாக boot செய்து கணினியைத் துவக்கி பிரச்சினையை ஆராய்ந்து தீர்வைத் தேடலாம்.

ஆனால் பல நேரங்களில் நம்மிடம் Boot Floppy யோ, வேறு Booting நினைவகங்களோ இல்லாமல் இருக்கும். இன்றைய தலைமுறை இணைஞர்களிடம் USB கருவிகள் கண்டிப்பாக இருக்கின்றன. இவர்களுக்காகப் பிரத்தியேகமாகப் படைக்கப்பட்டிருக்கிறது ஒரு இயங்குதளம்.

இந்த இயங்குதளத்தை உங்கள் USB நினைவகத்தில் ஏற்றிவிட்டு, அதன்மூலமே கணினியை Boot செய்வது மட்டுமின்றி, கணினியையே இயக்கலாம்.செயலிழந்து கிடந்த கணினியை இந்த USB யில் இருந்தபடி boot செய்து இயக்கி உங்களது பழைய தகவல்களை மீட்டெடுக்கலாம்.

கோப்பு இங்கே

WinRar கொண்டு இதை விரித்தெடுத்தபிறகு கிடைக்கும் Readme.txt கோப்பைப் படித்து அதன்படி செயல்படவும்..

Posted in பகுக்கப்படாதது | Leave a comment

பென்டிரைவ்கள் அதிக நாள் வேலை செய்ய ……

நண்பர்களே நாம் நிறைய யுஎஸ்பி ட்ரைவ் உபயோகித்து இருப்போம். உபயோகிக்கும் போது நன்றாக இருக்கும். ஆனால் வெளியே எடுக்கும் பொது சரியான முறையை கையாள்வது கிடையவே கிடையாது. யுஎஸ்பியை நிறுத்தாமல் எடுப்பது போன்ற செய்கைகளால் யுஎஸ்பி பொருட்கள் நீண்ட நாட்களுக்கு உழைப்பதில்லை. இதற்காக சில நேரங்களில் விண்டோஸில் கூட யுஎஸ்பியை நிறுத்த முடிவதில்லை. காரணம் அதனுடைய டிஎல்எல் கோப்புகள் அப்படி. இது ஒரு திறந்த மூலப்பொருளும் கூட.  அதற்கு ஒரு தீர்வு இந்த மென்பொருள். எஜக்ட் யுஎஸ்பி

இது குறித்த ஒரு வீடியோ  சுட்டி
மென்பொருள் தரவிறக்கம் செய்ய  சுட்டி

Posted in பகுக்கப்படாதது | Leave a comment